செந்தூரம், செவ்வந்திப்பூ,
செவ்வானம், செங்கரும்பு;
மல்லி, முல்லை, முத்து,
பருவமழை நாத்து,
தேரும், தெருகூத்து;
முக்கண்ணன் தாண்டவமோ,
சுந்தர காண்டமோ;
மருதம், நெல்லை, பாலை,
மா, பலா, வாழை,
பொன்னிபூஞ்சோலை;
அச்சு வெள்ளம், அறுசுவை,
மார்கழி, மதுரசபை;
வசந்தம், வளர்பிறை,
நட்பு, நான்மறை,
தங்கம், தாமரை;
குயில் பாட்டு
குங்குமப்பொட்டு;
இளமஞ்சள், இமயகங்கை,
வெண்ணிலா, வெள்ளி சலங்கை;
சந்தனம் சாந்து;
இயல் இசை,
யாழ் ஓசை;
இரத்தின நவமணி
முத்தின மாதுளைகனி
தாவும் மானோ,
துள்ளும் கயலோ ,
பாயும் முயலோ;
பைந்தமிழ் பாவோ,
தேனோ, தென்றலோ,
ஏனோ! தமிழில் வார்த்தை போதவில்லை
உன் ஒற்றை
குழலழகை சொல்லவுமில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment