கூறுவர், நீ வீண் என்று
சாடுவர், உன் தோல்வி கண்டு
ஏசுவர், நீ வீழ்கவென்று
யார் இவர்கள் உன்னை பழிக்க ?
ஏத்துவர், உன் வெற்றி கண்டு
சேருவர், செல்வம் செழிக்கையில்
நாடுவர், நலம் கொழிக்கையில்
யார் இவர்கள் உன்னை துதிக்க ?
உனக்கு முன்னும் வந்தனர்
வந்தவர் இருந்தனர், இருந்தவர் இறந்தனர்
இறந்தவரை உடன் மறந்தனர்
உனக்கு பின்னும் வருவர்
வருபவர் வாழ்வர் வாழ்பவர் வீழ்வர்
வீழ்வரை, உடன் மறப்பர் - ஆயினும்
சிலர் வாழும்போது சிறந்தனர்
வாழ்வில் உயர்தனர், உயர்தே இருந்தனர்
என்றும் மனதில் நிலைதனர்
மேடு பள்ளம் இருந்தாலும்
சம நிலைதவறா கடல் போல
வாழ்வு வந்தபோதிலும் நிலைதவறாதே
வீழ்வு நேர்ந்தபோதும் நிலைகுலையாதே
ஊழ்கொண்ட வாழ்கையதிலே
உயர்வேது தாழ்வேது ???
என்றும் நிலைதவறாதவரே நிலைதனர்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Super! Aani adicha maathiri thathuvam...
Thalaivaaaaaaaaaaa.....
Post a Comment