2016-07-12

Perpetuation


பெற்றதினால் பெற்ற இன்பமே நிச்சயம்
உயிரின் உன்மையே உயிர் தளிர்வித்தல்
ஆதலாலோ மெய்யேன்றனர் மேனியை 

Perpetuation


பெற்றதினால் பெற்ற இன்பமே நிச்சயம்
உயிரின் உன்மையே உயிர் தளிர்வித்தல்
ஆதலாலோ மெய்யேன்றனர் மேனியை 

2016-07-04

spot the verb

பசியோடு நான். அம்மா எங்கே.
ஓ அது சமையலறை  சத்தமா. அவளின் வாழ்க்கை அங்கேதான்.
அதுவே அவள் வாழ்க்கை
எனினும் அந்த சுவையான உணவால் பசி இல்லை இப்போது.

2015-11-16

ஆள்வது யாராயினும் வாழ்வது நாமாகட்டும்

மொழி, இனம் , ஜாதி ,மதம், கடவுளை பற்றிய கொள்கை இவை அனைத்தும் நம் அக-வாழ்க்கை பற்றியது.இதை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது அறமா?

இந்த கேள்விக்கு பதில் தேடும் முயற்சி தான் இது.

நான் அரசியல் அறிவோ அனுபவமோ பெற்றவன் இல்லை.
எனக்கு அறம், நெறி பற்றி அறிய, தெரிந்த ஒரே வழி திருக்குறள்.
இது காலத்தால் சோதிக்க பட்டதால் (time tested) அதன் மீது அதீத நம்பிக்கை எனக்குண்டு.

சரி, திருக்குறள் "யார் மக்களை ஆள தகுதி உடையவர்" என்று கூறுகிறது என தேட நேர்தேன்.

குறள்  382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

384:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

மேற்கண்ட குறள்களின் அடிப்படையில்
ஒரு அரசனுக்கு தேவை அஞ்சாமை ,ஈகை,அறிவு,ஊக்கம்,தூங்காமை,கல்வி,துணிவுடைமை, அறநெறி தவறாமை, குற்றம் புரியாமை,மானமுடைமை, பொருள் ஈடும் திறமை, ஈட்டியதை  காக்கும் திறமை, காத்ததை  பகிறும்  திறமை, காட்சிக்கு எளிமை (simplicity),கடுஞ்சொல் கூறாமை.

இதைப்போல இன்னும் சிலபன்புகளை பற்றி சொல்கிறது "இறைமாட்சி" அதிகாரம்.

இந்த பண்புகளில் "மொழி, இனம் , ஜாதி ,மதம்,கடவுளை பற்றிய கொள்கை" எதையும் குறிபிடவில்லை.
எனவே இவன் "நம் இனம்" , "நம் ஜாதி", "நம் மொழியாலன்", எனவே இவன்தான் ஆட்சி செய்யவேண்டும் என்று யார்  சொன்னாலும் அவர்களின் கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை.

632:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

இதில் "குடி" காத்தல் என்றுதான் உள்ளது, அதாவது மக்கள் என்று பொதுப்பொருள், இனம்/மொழி என்று பகுகவில்லை.

வட்டமோ,சட்டமன்ற தொகுதியோ, நாடாளுமன்ற தொகுதியோ, தேர்தல் வருகையில் யார் உங்களுக்கு நல்லது செய்வார்களோ அவர்களுக்கு வாகளியுங்கள்.

"மொழி, இனம் , ஜாதி ,மதம்,கடவுளை பற்றிய கொள்கை" அடிபடையில் வாக்கு கேட்பவர்கள், ஒன்று தவறான கொள்கைவாதிகள்  அல்லது ஏமாற்றும் கொள்கைவாதிகள்.

திருக்குறள் நன்கு அறிந்த அன்பர்கள், மேற்கண்ட எண்ணத்திற்கு முறனாக திருக்குறளில் கூறியிருந்தால் சுட்டிகாட்டி  என்னை திருத்தவும்