2010-04-21

Mr. and Mrs.






P.S. Thanks Su-G1 for the original photo (sujeevan)

2010-03-10

ஓரிரு வரிகள்

அவள்: "C"

ME:
முப்பதிரண்டு வார்த்தைகள் தான்
என்றாலும்
மனிதனுக்கு புரியாத மொழி!!!


அவள்: "TWITTER"

ME:
இரு அடி கட்டுப்பாட்டால்
எல்லோரையும்
வள்ளுவனாக ஆக்கும் தளம்!!!


அவள்: "KEYBOARD"

ME:
கைவிரல்கள் கோதும்
கலைத்து
கிடக்கும் கூந்தல் எழுத்து!!!


அவள்: "PASSWORD"

ME: புரியாத வார்த்தை, தெரியாது
போனால்,
கிடையாது.. அனுமதி!!!


அவள்: "MOBILE"

ME: கோடி மக்கள் கூடி
நிற்கையிலும்
தனியாய் பேச வைக்கும்!!!


அவள்: "WIKIPEDIA"

ME: பார் முழுவதும் படிப்பவர்களுண்டு
பக்கங்களின்
பட்டியளினால் பயன் தரும்!!!


அவள்: "GOOGLE"

ME: சளைத்தே போகாது, நிலைத்தே
நிற்கும்
தேடலினால் வந்த பொருள்!!!

அவள்: "GOOGLE"க்கு அவ்வளவுதானா ?

ME: ம்ம்ம்.....
எதையும் தொலைக்காமலும், அதில்
என்றும்
தேடச்செய்யும் இணைய இலக்கணம்!!!

2010-02-23

நிலவு

இவ்வுலகுக்கு ஒரு நிலவு
உள்ளதை அறிவேன் கண்ணே!!!
என் உலகமே ஒரு நிலவாக
உள்ளது உன்னில் மட்டும்

2010-02-22

என் மனம்

என் மனம் சொக்க தங்கம்,
அதில் துளி கூட இல்லை பங்கம்,
மல்லியை மிஞ்சும்
அதன் வென்மை,
தமிழும் சொல்ல தினரும்
அதன் தன்மை,
கண்ணே நீ அதில்
மொத்தம் நிறைந்திருப்பதினாலோ!!!