கொஞ்சம் கலந்தால், காதல் விதைத்தாள்
கள்ளச்சிரிப்பால் ஏக்கம் துடைத்தாள்
தாகம் தவிர்த்தாள்...... ஆதலால்
நானும் சற்றே வளர்ந்தேனே
பிரிந்த ஊடலால் காய்ந்தேனே
கொடுத்த காதலால் கனிந்தேனே .........
அவள் என்னை சூடியதால்
நானும் பூவாய் ஆனேனே ..........
என் எல்லாம் அந்த பாவைக்காகத்தான்
இப்பூவும் அவள் தோகைக்காகதான்......................