அவள்:
"C"ME:
முப்பதிரண்டு வார்த்தைகள் தான்
என்றாலும்
மனிதனுக்கு புரியாத மொழி!!!
அவள்:
"TWITTER"ME:
இரு அடி கட்டுப்பாட்டால்
எல்லோரையும்
வள்ளுவனாக ஆக்கும் தளம்!!!
அவள்:
"KEYBOARD"ME:
கைவிரல்கள் கோதும்
கலைத்து
கிடக்கும் கூந்தல் எழுத்து!!!
அவள்:
"PASSWORD"ME: புரியாத வார்த்தை, தெரியாது
போனால்,
கிடையாது.. அனுமதி!!!
அவள்:
"MOBILE"ME: கோடி மக்கள் கூடி
நிற்கையிலும்
தனியாய் பேச வைக்கும்!!!
அவள்:
"WIKIPEDIA" ME: பார் முழுவதும் படிப்பவர்களுண்டு
பக்கங்களின்
பட்டியளினால் பயன் தரும்!!!
அவள்:
"GOOGLE"ME: சளைத்தே போகாது, நிலைத்தே
நிற்கும்
தேடலினால் வந்த பொருள்!!!
அவள்:
"GOOGLE"க்கு அவ்வளவுதானா ?ME: ம்ம்ம்.....
எதையும் தொலைக்காமலும், அதில்
என்றும்
தேடச்செய்யும் இணைய இலக்கணம்!!!